ஞாயிறு, 11 ஜனவரி, 2009

மு. க. அழகிரி குமுதம் பேட்டி

திருமங்கலத்தில் ரவுடிகள் தன்னை தாக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள் என்றாரே விஜயகாந்த்?
ரவுடிகள் தாக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள் எனக்கூறுபவர் "காவல்துறையில் முறையிட்டிருக்கலாமே". அதை விடுத்து மக்கள் மத்தியிலும் அவரது கட்சியினர் மத்தியிலும் பேசி அனுதாபத்தைச் சம்பாதிக்க முயல்கிறார். ஜெயலலிதா பாணி அரசியலுக்கு அவரும் வந்து விட்டார்.

---மு. க. அழகிரி குமுதம் பேட்டி
உங்களின் கருத்துக்களை சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ தெரிவிக்க...

அன்புடன்

அறிவுடை நம்பி

சனி, 10 ஜனவரி, 2009

திருமங்கலம் தேர்தல் முடிவுக்கு பின்பு நடக்கப் போகும் நாடகம்!!!

தி.மு. வென்றால் மீண்டும் காங்கிரசுக்கு கட்டுப்பட்டுக் கழக(கலக) ஆட்சி தொடரும். இல்லை என்றால் இலங்கையில் நடக்கும் இன அழிப்பு மீண்டும் கண்ணை உருத்தும். உடனே தமிழ்மான உணர்வு மேலிட உலகத் தலைவர்  உரை நிகழ்த்துவார் தன் கரை படிந்த குரலால்....

 1.என் இனம் இத்தனை நாட்களாகச் செத்துக் கொண்டிருக்கிறது. தந்தி கொடுத்தோம்மனிதச் சங்கிலி ஊர்வலம் நடத்தினோம், (ஜெயலலிதா குடைச்சல் கொடுத்தும் இராமேசுவரத்தில் பேசிய தம்பி சீமான்அமீரைவைகோ மற்றும் விமானத்தில்போய் ஏற்றி வந்து கண்ணப்பனைகைது செய்தோம்). இப்படி ஏகக் காலத்தில் ஆளும் கட்சி எதிரிக் கட்சி என வித்தியாசம் பாராது கழகம் தமிழனுக்கு கண்ணீர் வடித்து கருணை செய்யக் கேட்கிறது ஆனால் இந்த மத்திய ஆளும் தோழமை மன்(ண்)மோகன்சிங் அரசு மனசு இறங்கவில்லை. இனியும் தமிழன் நாதியற்றுப் போய்விடக்கூடாது (என் ன்னராட்சி என்னோடு முடிந்து என் குடும்பம் நாதியற்று விடும்) என்கிற வருத்ததில் விடுதலை வேண்டி நிற்கும் ஈழத்திற்காக மத்திய அரசிலிருந்து விலகிவிடலாம் என்று கழகப் பொதுக்குழு முடிவு செய்துள்ளது.

2.அத்துடன் வரும் தேர்தலில் ஈழத்தமிழ் உறவுகளின் உரிமைக்காக !!! குரல் கொடுத்துவரும் பா.. வுடன் கூட்டணி அமைத்து பா..விடுதலைச் சிறுத்தை கட்சி மற்றும் மதிமுக உடன் வரும் தேசியத் தேர்தலை சந்தித்து நாற்பதும் நமதாக்கி அன்பு நண்பர் அத்வானியை பிரதமராகவும் கழகக் (என்) குடும்பத்தில் அனைவரும் மந்திரியாகவும் சபதம் செய்யப்பட்டுள்ளது.

 3. ஆகவே தமிழ் மக்களே !!! தமிழ்க்குடும்பங்கள் !!! நிம்மதியாக தமிழீழதில் வாழ வரும் தேர்தலில் மத்தியில் மாறுதல் செய்து தமிழனின் உணர்வினை உலகறிந்திட செய்திட வேண்டும்.

 4. தமிழன் நிம்மதியாக வாழ தமிழீழமே சரியா தீர்வு என்று தீர்மானம் போட்டுளோம்.

 

வாருங்கள் வசவுகளைத் தாருங்கள். இது என் முதல் பதிவு

 

அன்புடன்

அறிவுடை நம்பி 

செவ்வாய், 16 டிசம்பர், 2008

வலைப் பேச்சு பேசவா !!!

வலைப் பேச்சு பேசவா !!!


சோதனைப் பதிவு